Thursday, September 9, 2010

சிந்துவெளி மருத்துவம்.

சிந்துவெளி மக்கள் தாவரங்களின் மருத்துவப்பயனை நன்றாக அறிந்திருந்தனர் இவர்களிடமிருந்து ஆரிய மக்கள் மருத்துவ
மூலிகைகளைப் பற்றி தெரிந்து கொண்டனர் என்பர் ஆராய்ச்சி
யாளர். ஆக சிந்துவெளி மக்களின் மருத்துவச் சிந்தனைகளும்
மருத்துவ முறையும் அவர்கள் வழிவந்த அல்லது அவர்களைச்
சேர்ந்த தமிழ் மக்களின் மருத்துவ முறையும் ஒன்றி விட்ட
சிந்தனைகளின் வளர்ச்சியே தமிழ் மருத்துவமாகும். அதன்
வளர்ச்சியே பிற்காலத்தில் சித்த மருத்துவமாக மிளிர்ந்தது.
 நோய்கண்ட அளவில் உடனுக்குடன் எழிய முறையில்
மருந்து தயாரிக்கப்பட்டது. ஒவ்வொரு குடும்பத்திலும்
அனுபவம் வாய்ந்த முதியவர்களால் இம்முறை கையாளப்
பட்டது. இம்முறை காலம் காலமாக தொடர்ந்து வருவதாகும்.
செவிவழியாக அறிந்து பழக்கத்தில் வந்த தாகும். இம்மருத்து
வத்தை வீட்டு வைத்தியம், நாட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம்
என்றும் கூறுவர். இம்முறை மன னம் செய்யப்பட்டதே தவிர
எழுதப்பட்டதாகத் தெறியவில்லை. வாழையடி வாழையாக
நீண்ட நெடும் கால்ம வாழ்மொழியாக வளர்ந்து வருவதாகும்.
உலக நாடுகள் அனைத்தும் நவீன மருத்துவத்திற்கு அடிப்படை
 யாக அமைந்தது இம்மருத்துவ முறையே. மேலும் வாய்
வழியாகவும், பாடல்கள், பழமொழிகள், நம்பிக்கைகள், பழக்க
வழக்கங்கள் மூலமாக இம்மருத்துவ முறையைப் பாதுகாத்து
வந்தனர் தமிழர். இம்முறையைத் தொல் பழங்கால மக்களின்
எச்சங்கள் என்று கருதப்படும். மலைவாழ் பழங்குடி மக்களிடம்
இன்றும் காணலாம்.

நாட்டுப்புற மக்களின் பாடல்கள், பழமொயிகள், பழக்கவழக்
கங்கள் மூலம் மருத்துவ கோடுபாடுகளும்,  நோயில்லா
நெறிமுறைகள் மருந்து செய்முறைகள், நோய்களைப் பற்றிய
விவரங்களை அனைத்தும் கூறுவதாக உள்ளது. நோய் தீர்க்கும்
தாவரங்களைக் கொண்டு பக்குவமாக மருந்து அளித்த தால்
இதற்கு நாட்டு மருத்துவம் என்று பெயரானது. அவ்வாறு
மருந்து செய்பவர் 'நாட்டு மருத்துவர்' என்று அழைக்கப்பட்டார்.
அண்மைக் காலம் வரை சிற்றூர்களில் இவ்வித மருத்துவம்
செய்பவரை நாட்டு வைத்தியர் என்று தான் அழைப்பர். இம்
மருத்துவ முறை சங்க காலத்திலிருந்தே இன்று வரை தொடர்ந்து
வந்துள்ளது. இந்த முறை பிக்காலத்தில் தமிழ் மருத்துவமாகி பிறகு சித்தர்களால் வளர்க்கப்பட்டு  சித்த மருத்துவம் என்று பேர் பெற்றது.

------------------------------------------------------------(தொடரும்)